பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 69 தலைவன் வந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் என்று தலைவி கருதுவாள் ! தலைவனுக்கும் இதே மாதிரி சந்திரன் தோன்றியவுடன் எண்ணத் தோன்றாதா ? தோன்றினால் உடனே புறப்பட்டு வருவான். வந்து, தலைவியின் வீட்டின் புறக்கடைப் பக்கம் ஒசைப்படாமல், நிற்பான். பிறர் அறியாமல் தலைவி மட்டும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், மென்மையாக ஒசைப்படுத்து @#ff@丁。 அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் தாய் முதலானவர் கட்கு அவ்வோசை கேளாது. ஆனால், விழித்துக்கொண்டு காதைத் தீட்டிக்கொண்டிருக்கும் தலைவிக்கு, அம்மெல்லிய ஒலி கேளாமல் இராது. ஒலியைக் கேட்டவுடன், அவள் வெளியே வருவாள். நிலவின் பால் போன்ற ஒளியிலே அவளும் தலைவனும் இன்பமாகப் பொழுது போக்குவர். அதிலும், இன்று ஊரில் திருவிழா நடைபெறுகிறது" விழாக் கொண்டாடுகின்ற கும்மாளத்தில் அனைவரும் ஈடு பட்டுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும், பிறருடைய விஷயங்களை அறிந்துகொள்வதில் பேரார்வஞ்செலுத்தி. அவர்கள் விஷயங்களில் தலையிடும் சிலர், எல்லா ஊர் களிலும் எல்லாக் காலங்களிலும் இருப்பர். அப்படிப்பட்ட நல்லவர்களும், இப்பொழுது திருவிழா நடைபெறுகின்ற காரணத்தால், பிறருடைய விஷயங்களில் தலையிடுவதை மறந்து, திருவிழா எக்களிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு கருதி, அன்று எவ்வாறேனும் தலைவன் வருவான் என்று எதிர்பார்த்துக்கொண்டு, தலைவி படுத்து உறங்குவது போலப் பாசாங்கு செய்துகொண் டிருந்தாள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. கிழக்குத் திசையில் புறப்பட்ட பூரண சந்திரனும், யாருக்கும் பயன் படாமல் இதோ மெல்ல மறையப் போகிறான். ஊர் முழு வதும் விழாக் கொண்டாடுகிற சாக்கில், ஊரின் வெளியே சென்று களியாட்டமாடுகின்றனர். தலைவி மட்டும்