பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 A மகளிர் வளர்த்த தமிழ் 'கொட்டு கொட் டென்று விழித்துக் காத்துக்கொண் டிருக்கிறாள், வாராத தலைவனது வாராத வரவை எதிர் பார்த்து. 'ஒருவாறு இரவு கழிந்து விடியற்காலமும் ஆகி விட்டது. வண்டுகள் தங்கள் துணையுடன் கூடிக் கொண்டு, விடியற்கால நேரமாதலின், மலர்களில் உள்ள தேனை உண்ணப் புறப்பட்டுவிட்டன. ஆனால், யான் மட்டும், அணிகள் எல்லாம் கழலக்கூடிய தனிமை நோயொடு, விடியுமட்டும் இமையொடு இமை பொருந் தாமல் இருக்கிறேன். எனவே, என்னோடு இவ்வுலகம் போராடுகின்றது. உலகுடன் என் தனிமைப்பட்ட நெஞ்சும் போராடுகிறது என்னும் இவ்வழகிய பொருளில் வெள்ளி வீதியார் கவிதை புனைகிறார் : 'நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிப் பால்மலி கடலில் பரந்துபட் டன்றே : ஊரே, ஒலிவரும் சும்மையொடு மலிதொகு பீண்டிக் கலிகெழு மறுகின் விழவய ரும்மே ; கானே, பூமலர் களுவிய பொழிலகந் தோறும் தாமமர் துனையொடு வண்டுஇமி ரும்மே ; யானே, புனைஇழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு கணைஇருட் கங்குலும் கண்டை இலனே : அதனால், என்னொடு பொருங்கொல்இவ் வுலகம் ! உலகமொடு பொருங்கொல்என் அவலமுறு நெஞ்சே : (நற். 348) நிலவு, கடல், ஊர், மக்கள், காடு, துணையுடன் கூடிய வண்டு என்ற இவற்றைப்பற்றி அழகொழுகப் பேசிவிட்டு, அடுத்தபடியாகத் தன்னுடைய பரிதாபமான நிலையைத் தலைவி பேசும்பொழுது நம்மையும் அறியாமல் நம் மனம் தலைவியின் துயரில் பங்கு கொள்கிறது.