பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அஞ்சாத அறிவுரை சிங்கப் பாடல்களாகிய எட்டுத் தொகையுள் பதிற்றுப் பத்து என்பது ஒரு தொகுப்பு நூல் : சேர மன்னர் களைப்பற்றியே மு. மு. வது ம் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மன்னனுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் பத்து மன்னர்களைப்பற்றிய பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. - - இதில் சிறப்பு யாதெனில், கிடைக்காமற் போன இரு பத்துக்கள் போக எஞ்சிய எட்டுப் பத்துக் களுள் ஒரு பத்தை ஒரு பெண் புலவர் பாடியுள்ளார். பாடியவர், நாம் முன்னரே அறிந்துள்ள காக்கை பாடினியார் நச்செள்ளையார். அவரால் பாடப் பெற்ற பெருமை வாய்ந்த மன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பவன். இப்பெண்ணரசியார் பாடிய பத்துப் பாடல் களும், பதிற்றுப் பத்தில் ஆறாவது பத்தாக வைக்கப் பட்டுள்ளன. காக்கை பாடினியார் பாடிய பத்துப் பாடல்களும் சேர்ந்து இருநூறு அடிகளே உள்ளன. மிகப் பெரிய பாடலில் முப்பத்தேழு அடிகளும், மிகச் சிறிய பாடலில் எட்டு அடிகளும் உள்ளன. - - பதிற்றுப்பத்து’ என்ற தொகுப்பு நூலில் உள்ள பத்துப் பத்துக்களையும் பாடியவர்கள் ஆண் மக்களே என்று கூற இடம் தாராதபடி, ஒரு காக்கைப் பாடினியார் அதனிடைப் புகுந்தார். பத்துப் பேருக்குள் ஒருவராக நடு நாயகமாக விளங்குகிறார் இப்பெண் புலவர். இப்பெருமாட்டியார் ப;ா டி யு ள் ள பாடல்களில், பற்பல சிறந்த பொருள்களைப் பாடியுள்ளார். மிகப்