பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 A மகளிர் வளர்த்த தமிழ் இவ் வாறே முழுக் கவனத்துடன் வளர்ப்பவர்கள் பெண்கள். இவ்வாறு கூறுவதால், ஆண் மக்கள் கவிதை சிறப்புடையனவல்ல என்று கூறுவதாக நினைத்துவிட வேண்டா. மகளிர் புனையும் கவிதைகளில் அவர்களது உணர்ச்சி வெள்ளம் மிக்குப் பாய்கின்றது என்பதே கருத்தாம். எதில் ஈடுபட்டாலும் முழு மூச்சுடன், பெண்கள் ஈடுபடுவார்கள் என்று கூறும் பொழுது இதனையே குறிப்பிடுகிறோம். ஆண் மகன் எதில் ஈடுபட்டாலும் தன்னை மறந்துவிடுவதில்லை. ஈ டு ப டு ம் தான், ஈடுபாட்டைத் தரும் பொருள், ஈடுபாடாகிய அனுபவம் என்ற மூன்றையும் ஆண் மகன் மறப்பதில்லை. ஆனால், பெண்கள் ஈடுபடும் பொழுது இவ்வாறல்லாமல், ஈடுபாடு அல்லது அனுபவம் ஒன்றே எஞ்சி நிற்கின்றது. அவ்வனு பவத்தில் பெண்டிர் தம்மையே மறந்துவிடுகின்றனர். அதனால், அவர்களுடைய அனுபவம் ஆண் மகனது அனுபவத்தைக் காட்டிலும் ஆழமும் வலிமையும் உடைய தாகிறது. இவ்வாறு ஒன்றில் ஈடுபடுவது பல சமயங்களில் அல்லல் விளைக்கவும் கூடும். ஆனாலும், அத்தகைய ஆழ்ந்த அனுபவம் மிக மிகத் தேவையாகும். பத்தி வழியில் சென்ற அடியார், ஆழ்வார் அனைவரும் தம்மைப் பெண்களாகக் கருதிக் கொண்டு பாடியதன் ஆழ்ந்த கருத்து இதுவேயாகும். காதல் இன்பத்திற்கூடத் தலைவன் தன்னையே முற்றிலும் மறப்பதில்லை. ஆனால், தலைவியோவெனில், முற்றிலும் தன்னை மறந்த நிலையில் ஈடுபடுகிறாள். ஆண்டவனது கருணை வெள்ளத்தில் முழுவதும் அமிழ்ந்துவிடும் இயல்பு, ஆண் தன்மை இருக்கும் வரை வருவதில்லை. எனவே, அவ்வாறு ஒரு பத்தன் தன்னை மறந்து பத்திப் பெருவெள்ளத்தில் மூழ்கும் பொழுது பெண் தன்மையை அடைந்து விடுகிறான். இதனாலே தான் தங்களைப் பெண்ணாகக் கருதிக் கொண்டு பெரியார்கள் பாடினார்கள்.