பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 A மகளிர் வளர்த்த தமிழ் பழைய காலத்தில் இருந்த சேர நாட்டையும், சேரன் தலைநகரையும், அந்நாட்டின் சிறந்த உறுப்புக்களையும் பாடியுள்ளார். அம்மட்டோ ? சேர மக்களின் உணவு, கல்வி, வாழ்வு முறை, படை முதலியவற்றையும், சேரனு டைய போர்த்திறம், புகழ் முதலியன பற்றியும் சுவைபடக் கூறியுள்ளார். சுருங்கக் கூறுமிடத்து, இவருடைய பாடல்களைக் கொண்டு அற்றை நாள் சேர நாட்டின் வரலாற்றைக் கூடப் பத்து ஆண்டுகள் அளவுக்குக் கூறி விடலாம். இத்துணைச் சிறப்பு வாய்ந்த முறையில், சரித்திரம் என்று கூறத்தக்க முறையில், இவர் பாடிய பாடலின் சில பகுதிகளை விரிவாகக் காண்போம். - சேர நாட்டின் மேற்கரைப் பகுதியை ஆட்சி செய் தான் சேரலாதன். அவன் ஆண்ட நாட்டின் பெரும்பகுதி கடல் மோதும் கரையை யுடையது. எனவே, அவனுடைய நாட்டின் பெருமையைக் கூறப் பாடலைத் தொடங்கும் ஆசிரியர்க்குக் கடற்கரை நினைவுக்கு வருகிறது. கடற் கரையில் ஒயாது காற்று வீசுதலின், அலைகள் மலைபோல எழுந்து கரையில் மோதுகின்றன. தூரத்தே இருந்து இக்காட்சியைப் பார்ப்பதோடு புலவர் நின்றுவிடவில்லை. கவிஞராதலின், கடல் இடும் பேரிரைச்சலுக்குக் காது கொடுத்துக் கேட்கிறார். கவிதை பிறக்கிறது. பாடல் மிக நீண்டதாகலின், சிற்சில பகுதிகளை மட்டும் காண்போம். துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர விளங்கிரும் புணரி உரும்என முழங்கும் கட்ல்சேர் கானல் குடபுலம் ........” (அசைகின்ற நீர் நிரம்பிய அகன்ற கடற்பரப்பானது கலங்கும்படி காற்று மோதுதலால், விளங்க எழுகின்ற பெரிய அலைகள் இடி போல முழங்கும் கடல்) பாடலை வாய் விட்டுப் படித்துப் பார்த்தால் மேலே கூறிய அனைத்தியல்புகளையும் அதிற் காணலாம்.