பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 73 'துளங்குநீர் வியலகங் கலங்கக் கால்பொர'. என்ற முறையில் தடித்த எழுத்துக்களை அழுத்தம் கொடுத்துப் படித்தால், அல்ைகள் தெருட்டுவதை ஆசிரியர் ஒலிக் குறிப்பின் மூலம் அறிவிக்கிறார் என்பதை எளிதில் அறியலாம். - படமெடுத்து ஆடும் பாம்புகள் நிறைந்த மலையை இதோ வருணிக்கிறார் அம்மையார். படுத்த நிலையி லிருந்து தலையைத் தாக்கிப் படம் எடுத்து ஆடித் தாழ்ந்தும் உயர்ந்தும் ஆடும் பாம்பு, அரங்கத்தில் நாட்டியம் ஆடும் பெண்ணுடன் உவமிக்கப்படுகிறது : இயலினன் ஒல்கினள் ஆடும் மடமகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப் பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி அரவு வழங்கும்.......... Iநடந்தும் அசைந்தும் ஆடும் நாட்டியக்காரி ஆடுங் களத்தே தோன்றி மருளுற்று அசைந்தாடுவது பேர்ல, பெரிய மலையின்கண் இடங்கள் தோறும் குறுக்கே ஊர்ந்து சென்று படமெடுத்து ஆடும் பெரிய ரத்தினத்தை யுடைய பர்ம்பு) - - - நாடு மலை நாடாய் இருப்பினும், மல்ைபடு திரவியங் களே சாலும் என்றிருந்து விடாமல், அந்நாட்டு மக்கள் தங்கள் உழைப்பால் நல்ல பயிர் விளைவிக்கிறார்களாம். நன்செய் நிலங்களைப் பயிர் செய்வதற்கு அதிக முயற்சி தேவை இல்லை. - சேரநாட்டில் புன்செய்ப் பயிர் விளைவிப்பவர்கள் பெருமுயற்சி செய்கிறார்களாம். அதனைக் கூற வந்த அம்மையார் வன்கை வினைஞர் எ ன் று குறிப்பிடு கிறார். வன்கை என்பதற்கு வலிமை பொருந்தின கைகள் என்பது பொருள். அதிக உடலுழைப்பு இருந்தால்தானே கை வன்மையுடையதாகும் ? . . .