பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 A மகளிர் வளர்த்த தமிழ் "சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி 'நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின் அலங்குகதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடு.........' (சிறிய இலைகளையுடைய வேலமரம் நெருக்கமாய் உள்ள புன்செய் நிலத்தில் விதை விதைக்கும் வலிய கையினையுடைய உழவர், சிறப்புடைய பல எருதுகளை (அவற்றின் கழுத்தில் கட்டிய மணி) ஒலிக்கும்படி பூட்டிய ஏர் உழுது, சென்ற வழியில் விளங்கும் கதிர்கள் முற்றிய தால் அழகிய ஒளி பொருந்திய கதிர்களைப் பெறும் இடம் அகன்ற நாடு.) - . சேரமன்ன்ன் யானைப் படைகளை மிகுதியாகப் பெற்றுள்ளான். சேரனுடைய யானைகள் எத்தகையவை தெரியுமா ? பகையரசர்களுடைய கோட்டை அல்லது அரண்மனைகளில் கதவுகளைக் கண்டால் தம் பொறு மையை இழந்துவிடும். காலம் பார்த்துத் தாக்க வேண்டும் என்பதற்காகப் பாகர்கள் குத்துக் கோலால் குத்தி, அவற்றை அடக்கி நிறுத்த முயல்கிறார்கள். ஆனால், அவை நின்றால் தானே வேகமாக முன்னேறித் தம் கொம்புகளால் அக்கதவை முட்டி உடைக்கவே முற்படு கின்றனவாம். இதோ புலவர் அந்த யானைப் படை பற்றிப் பாடுகிறார் : 'குழுஉநிலைப் புதவில் கதவுமெய் காணின் தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல் ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா ஆங்குநின் களிறே !' |பல நிலைப்படிகளையும் உடைய கோட்டை வாயிலில் கதவுகளை உண்மையில் கண்டால், வண்டுகள் பாய்ந்து