பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச.ஞானசம்பந்தன் A 75 உண்ணும் மதநீர் பொழிகின்ற அவை, குத்துக்கோலை மதியாமல் வேங்கைப் புலியுடன் போர் செய்ததாலுண்டா கிய தழும்புகளுடன் கூடிய புள்ளிகளுடைய நெற்றியை உடைய யானைகள் நிமிர்ந்த கையைச் சுருட்டி, யானை மேல் உள்ள வீரர்கள் ஏந்திய அங்குசத்தைக் கடந்து போரில் மேம்பட எடுத்த கொடி அசையுமாறு சென்று அம்மதிற் கதவுகளைப் பிளக்கும்.) இத்தகைய யானைப்படையை உடைய சேரனது காலாட் படை பற்றியும் புலவர் கூறுகிறார். 'இன்று நன்கு உண்டுவிட்டோம் ! ஆனால், நாளை அக்கோட்டை யைப் பிடித்தால் ஒழிய உண்ணமாட்டோம் !’ என்ற பொருளில். - 'இன்றுஇனிது நுகர்ந்தனம் ; ஆயின் நாளை மண்புனை இஞ்சி மதில்கடந்து அல்லது உண்குவம் அல்லேம்...!" என்று கூறுகிறார்கள். இத்தகைய படைகளையுடைய சேர மன்னன் எத்தகை யவன் ? அவனுடைய வீரத்தையும், கொடைச் சிறப் பையும் பலபடியாகப் பாராட்டுகிறார் ஆசிரியர். வீரம் என்பது போர்க்களத்தில் பகைவர்க்கு அஞ்சாது எதிர் நின்று போரிடுதலாம். ஆனால், அதனினுஞ் சிறந்த வீரம் ஒன்றுண்டு. அதுவே பகைவனுக்கு ஒர் இடுக்கண் தேர்ந்த பொழுது, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெறாமல், விட்டுக் கொடுத்தலாகும். சேரலாத னிடம் இக்குணம் நிறைந்திருந்ததென்பதைக் காக்கை பாடினியார், 'குரல் புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி...புரவு எதிர் கொள்வனைக் கண்டனம் (பதிற். 57) என்ற அடியால் விளக்குகிறார். இனி, அவன் கொடைத்திறத்தைக் கூறுகிறார் புலவர். சாதாரணமாக ஒர் ஆண் மகன் பொறுக்க முடியாத