பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 A மகளிர் வளர்த்த தமிழ் ஒன்று, பெண்களின் கண்ணிர். இந்த் அம்பின் எதிரே எந்த ஆடவனும் தாழ்ந்து விடுவான். ஆனால், சேரலாதன், பெண்கள் கண்ணிரைக் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும், ஏழைகளின் துயரைக் கண்டு அஞ்சி, அவர்கள் வறுமை யைப் போக்கினான், என்ற கருத்தில், ஒண்ணுதல் மகளிர் துளித்த கண்ணினும், இரவலர் புன்கண் அஞ்சும், புரவு எதிர் கொள்வோன்" என்று கூறுகிறார். மேலும், அவன் கை, கொடுக்கக் குவிதல் அல்லது, பிறரிடம் ஒன்றைப் பெற விரிதல் இல்லை என்ற பொருளில், இரப்போர்க்குக் கவிதல் அல்லது இரை இய மலர்பு அறியா" என்றும் கூறுகிறார். இத்துணைச் சிறந்த மன்னனுக்கும் அப்பெண் புலவர் அறிவுரை கூறுகிறார். மனிதன் எத்துணைச் சிறந்தவனா யினும், சில நேரங்களில் எல்லை மீறிச் சென்று விடுவது உண்டு. அந்த நேரங்களில் அறிவுடைப் பெருமக்கள் அவனுக்கு அறிவு வருமாறு இடித்துக் கூறுவர். நிறைந்த வெற்றிகளைப் பெற்றமையால் போலும், சேரலாதனும் ஒரு தவற்றைச் செய்தான் ! அதாவது பகைவருடைய நாட்டின்மேல் படை கொண்டு சென்று வென்ற பின்னரும் சினம் தணியாமல் பழிவாங்கும் நோக்குடன் அவர்கட்குத் துன்பம் விளைத்தான் ; அவர்கள் நாடு தன்னால் வெல்லப் பட்டமையின் இனித் தன்னுடையதே என்று நினைத்து, அதனைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டான். இவ்விரண்டு இயல்பையும் புலவர் கண்டிருக்கிறார் : அரசே, உன் வலிமையை அறியாமல் போரிட்ட மன்னர் தோற்றுக் கப்பம் செலுத்துவராயின். அவர்களிடம் மேலும் சினங் கொள்ளாதே" என்ற கருத்தில், - அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்றுப் பணிந்துதிறை தரும்நின் பகைவ ராயின் சினம்செலத் தணிமோ !” என்று பாடுகிறார்.