பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 77 வெற்றிச் சிறப்புகளுடன், மிக்க சினமும் உடைய ஒரு மன்னனைப் பாடிப் பரிசில் பெறச் சென்ற இப்பெண் புலவர் எவ்வாறாயினும் அவனைப் புகழ்ந்து பரிசில் பெற்று வந்துவிடவேண்டும் என்று கருதாமல், அவனுக்குப் பிடிக்காவிடினும் தம் கடமை அவனுக்கு அறிவூட்டுவதே என்று கருதினார். தம் கருத்தை அஞ்சாமல் பாடலிலும் அமைத்துப் பாடினார் என்றால், என்னே இவருடைய அஞ்சா நெஞ்சம் இத்தகைய அஞ்சா வீர மகளிர் பலரை யும் பெற்றதால்தான், தமிழ் நாகரிகம் இன்னும் நின்று நிலவுகிறது போலும் ! 13. மான வாழ்க்கை தெருவில் இரண்டு பேர் மிகவும் கோபத்துடன் பேசிக் கொள்ளுகின்றனர் : வாய்க்கு வந்த சொற்களையெல்லாம் - பயன்படுத்துகின்றனர். வாய்ச் சண்டை கைச்சண்டை யாகும் நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஒருவர், இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயல்கிறார். நேற்றையப் பயல் இவன் என்னை மானங்கெடப் பேசி விட்டானே !' என்கிறார் அவர். இது சாதாரண நிகழ்ச்சி. மானம் என்பது உண்மையில் யாது ? மனிதன் தன்னுடைய நிலையிலிருந்து தாழ்வது யாது "இவனா இந்தச் செயலைச் செய்தான் ! என்று பெரி யோர்கள் சொல்லக் கூடியவற்றைச் செய்தலே தாழ்வ தாகும். ஏன் அவ்வாறு செய்ய நேரிடுகிறது ? வேண்டிய பொருளைப் பெற மேற்கொள்ளும் வழி தன் மதிப்புக்கு ஏற்றதா என்பதைக்கூட அவன் ஆராய்வதில்லை. அதன் மறுதலையாகப் பொருளின் மேற்கொண்ட பற்றுக் காரண மாக, எவ்வழியை மேற்கொண்டேனும் பொருளைப் பெற்றுவிட வேண்டும் எனக் கருதுகிறான். தவறான வழியை மேற்கொள்ளும் பொழுது, பெரியோர், இவனா