பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 A மகளிர் வளர்த்த தமிழ் இவ்வாறு செய்தான் ! என்று பேசுகின்றனர். சுருங்கக் கூறினால், பிறர் அறிந்தாலும் அறியாவிட்டாலும், தவறான செயலைச் செய்யும் போது மனிதன் மானத்தை இழக்கிறான். பிறர் அதனை அறிந்து கூறாவிட்டாலும், அவன் மனச்சான்று நன்கு இடித்துக் கூறும் என்னலாம். r மிகவும் தேவையான பொருள்களைப் பெற வேண்டு மானாற்கூட இதே சட்டம்தான் பேசப்படும். இதோ வள்ளுவர் பேசுகிறார் : "ஈன்றாள் ப்சி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.” (656) பெற்றெடுத்த தாயும், குழவியும், கற்புடைய மனைவியும் பசியால் வாடி உயிர் விட நேரிட்டாலுங்கூடச் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யலாகாது, என்று ஆசிரியர் கூறுவதால் இவ்வுண்மை விளங்கும். இன்றைய உலகில் பசி போன்ற பொறுத்தற்கு இயலாத துன்பங்கள் ஒருபுறம் இருக்க, சாதாரண காரியங்கட்குக்கூட மனிதன் தன் நிலைக்கு ஒவ்வாத வற்றைச் செய்கிறான். ஆனால், பழந்தமிழர் இவற்றைச் 1.செய்ய மிகவும் அஞ்சினர். ஒளவையாருக்கும் அதியமானுக்கும் இடையே இருந்த நட்பு ஒப்பற்றது. நட்பின் சிகரம் என்று கூறக்கூடிய அளவில் அவர்கள் நட்பு நன்கு வளர்ந்து உரம் பெற்றிருந் தது. அதியமான் பரிசில் கொடுப்பவனாகவும், பாட்டி யார் அதனை ஏற்றுக் கொள்பவராகவும் என்றுமே தம்மைக் கருதியதில்லை யானை கோட்டிடை (கொம்பு களிடையே) வைத்த கவளம் போல அவன் பரிசில் தப்பாது என்று அவரே ஒரு முறை பாடியுள்ளார். சுருங்கக் கூறினால், அவர் வேண்டியவற்றை அவனிட மிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலையில் பழகினர் இருவரும் எனலாம். ஆனால், மனிதன் முக்குண வயப் பட்டவன். பல எதிர்பாராத நேரங்களில் தவறான குணங்கள் அவனை ஆட்கொள்வதால், அவன் சிறிய