பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.0 A மகளிர் வளர்த்த தமிழ் வருகிறார் ? நண்பனைக் காணச் சென்ற இடத்தில் பரிசில் பெறுதல் இரண்டாவதாக நடைபெறுவதே தவிர, பரிசிலைக் கருதியே அவர் செல்வதில்லையே ! பாட்டியாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அது தான் போகட்டும் ; பரிசில் வாங்குவதற்காகவே ஒருவர் வருவதாக வைத்துக்கொள்வோம். அதற்காக அவரைக் காணாமல் வெளியில் நிறுத்தி வைப்பதா ? எத்துணைத் தூரம் கடந்து, எத்துணை இடர்களைப் பொறுத்துக் கொண்டு வரவேண்டியுளது ஒரு வள்ளலைக் காண்பதற்கு? முன்னர் ஒரு புலவன் பரிசிலன் துயரங்களையெல்லாம் சேர்த்துப் பாடிய பாடல் பாட்டியார் நினைவிற்கு வந்தது : - - 'ஆனினம் கலித்த அதர்பல கடந்து மானினம் கலித்த மலைபின் ஒழிய மீன்இனம். கலித்த துறைபல நீந்தி உள்ளி வந்தானாம் அப்புலவன். (புறம்-138) (மாடுகள் நிறைந்த காட்டையும், மான்கள் நிறைந்த மலைகளையும், மீன்கள் நிறைந்த ஆறுகளையும் கடந்து உன்னை நினைத்து.......J . இத்தனைத் துயரங்களையும் பொறுத்துக் கொண்டு வரும் பரிசிலர்களைக் காணாமல் காக்க வைப்பது என்ன பெருந்தன்மை ? அற்பர்கள் தாம் வந்தவருடைய வருத் தத்தை அறியாமல், தம்முடைய பெருமையைக் காட்டக் காக்க வைப்பார்கள். . . தமிழ் நாட்டில் இக்காலத்தில் மட்டும் காணப் பெற்றுப் பிற நாடுகளிலும் பிற காலத்திலும் காணப் படாத இந்த இனத்தைச் சேர்ந்தவனா அதியமான் ? பின்னர் ஏன் பாட்டியாரை நாட்கணக்கில் காக்க வைத்து விட்டான் ? நண்பர் என்ற முறையில் உடனே கண்டிருக்க வேண்டும். பரிசிலர் என்று கருதினாற்கூட இத்தனை