பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 81 நாள் காக்க வைப்பது மனிதரை மனிதன் இழிவுபடுத்துவ தாகும். எனவே, பாட்டியார் தம் மானம் போய்விட்ட தாகக் கருதி விட்டார். காக்க வைத்த தவறான செயலைச் செய்தமையின் அவனும், பரிசிலைக் கருதிக் காத்திருந்தமை யின் தாமும் மானம் இழந்ததாகக் கருதினார் பாட்டியார். உடனே வாயிற்காவலனிடம் கூறுவதுபோல ஒரு கவிதை கூறினார். வாயிற்காவலனே, வள்ள ல் க ள் செவியிடத்து விளங்கிய சொற்களை விதைத்து, அதனால் தாம் விரும்பிய பரிசிலை விளையுமாறு செய்கின்ற உரமுடைய நெஞ்சுடன் கூடிய மேம்பாட்டை அடைய விரும்பும் பரிசிலால் வாழும் இல்வாழ்வுடையார்க்கு, அடையாத வாயிலின் காவலனே! விரைந்த குதிரையை உடைய அதியமான் தன் தரத்தை அறியவில்லையா ? அது கிடக்க. என் தரம் அறிய வில்லையா ? அறிவும் புகழும் உடையோர் அனைவரும் இறந்துவிட்டார்களா ? உலகம் வெறிச்சிட்டுப் போய் விட்டதா ? ஆதலால் எம் இசைக் கருவிகளையும், பிற வற்றையும் மூட்டைக் கட்டிவிட்டோம். மரத்தை வெட்டும் தச்சனுடைய பிள்ளைகள் கோடரியுடன் காட்டில் புகுந்தால் காடு எவ்வாறெல்லாம் பயன்படும் ? யாமும் எத்திசையில் சென்றாலும், அத்திசையெல்லாம் சோறு உண்டு, என்ற கருத்துப்படப் பாடினார் : வாயி லோயே வாயி லோயே ! . . . . வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து . வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயி லோயே ! கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன்.அறி யலன்கொல் ? என் அறி யலன்கொல் ? அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே ! அதனால் மகளிர்-6 . .