பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 3 இவ்வுண்மையை மறவாமல் நாம் மனத்துட்கொண்டு பெண்களின் பாடல்களைக் கண்டால், அவர் க. ஸ் அனுப்வத்தின் ஆழத்தை ஒருவ்ாறு அறியலாம். சங்க காலத்திலிருந்து சமீபகாலம் வரை அவர்கள் பாடிய பாடல்கள் தனித் தன்மை பெற்று விளங்கக் காணலாம். தமிழ்ப் பயிரைப் பலரும் வளர்த்தனர் என்பது உண்மை தான். எனினும், மகளிர் வளர்க்கும் பொழுது, தம் ஊனையும் உயிரையும் அதனுள் சொரிந்து வளர்த்தனர். அவர்களால் பாடப் பெற்றவர் யாராயினும், இவ்வுண்மை யைக் காணலாம். அரசன் முதல் ஆண்டி வரை யாரைப் பாடினாலும், முழுத் தன்மை பெற்ற பாடலாகும் அவர் களது பாடல். நகைச் சுவை, அவலச் சுவை, வீரச் சுவை முதலிய எச்சுவை அமையப் பாடினாலும், ஆழ்ந்த அனுபவத்திலிருந்து தோன்றுவன அப்பாடல்கள். வீட்டிற்கு விளக்கம் தருபவர்கள் பெண்கள் என்பதை அனைவரும் அறிவர். மனைக்கு விளக்கம் மடவார்,' எனப் பழைய பாடல் ஒன்று பகர்கிறது. மனைக்கு விளக்கம்' என்பதற்கு யாது iொருள் ? வீட்டில் வாழ்பவர் இன்பமாக வாழ்வதற்குரிய பொருள்களைத் தந்து மனங்களிக்கச் செய்வதே விளக்கந் தருவதாகும். உணவால் மட்டும் மனங்களிக்கச் செய்துவிட முடியுமா ? எனவே, அறிவாலும் உதவுபவர் பெண்டிர் என்பது அப்பழம் பாடலால் அறியப்படுகிறது. பெண்டிர் கற்றறிவுடைய வராய் இருந்தாலன்றி, அறிவால் எவ்வாறு உதவுவர் ? பழந்தமிழ்ப் பெண்டிர் பலரும் சிறந்த கற்றறிவுடையவ ராய் இருந்திருக்கின்றனர் என்பதை அந்தக் கால இலக்கியங்களை ஒரு முறை புரட்டினவர்களும் அறிதல் கூடும். அவர்களை ஒளவையார், பாரி மகளிர், ஒக்கூர் மாசாத்தியார், முடத்தாமக் கண்ணியார், நப்பசலையர், வெள்ளி விதியார், காக்கை பாடினியார் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர் அனைவரும் இற்றை க்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத்தமிழ் நாட்டில்