பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 A மகளிர் வளர்த்த தமிழ் காவினெங் கலனே ! சுருக்கினெம் கலப்பை ! மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ! (புறம். 206) பிறரிடம் சென்று பரிசில் வாங்குபவர் என்று கூறப் படுபவரைப் பற்றி, அவர் யாது கூறுகிறார் ? உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்துப் பரிசிலர்' என்பதால், நெஞ்சு உரம் கொண்டவர்கள் ; நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றுங் கூறுகிறார். 'வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை' என்றதனால் எப்படிக் கொடுத்தாலும் சரியென்று நினையாமல் (பிச்சைக்காரர் அல்லர் பரிசிலர்) .ெ க ள ர வ. மா ன முறையில் உபசரிக்கப்படுவதையே விரும்புவர் என்றும் கூறுகிறார். 'பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! என்று கூறும்பொழுது எவ்வளவு எள்ளல் சுவை (irony) வைத்துப் பாடுகிறார் கதவை மூடிக் கொண்டு இவரைப் பார்க்க அனுமதியாதவனைப் பார்த்து அடையாத கதவினையுடையவனே என்பது நகைப்பை உண்டாக்குகிறதன்றோ ? அதியமான் கொடுக்காவிடில் உலகத்தில் வள்ளல்களே இல்லையென்றா நினைத்துக் கொண்டாய் ! உ ல க ம் வள்ளல்கட்கு, அவ்வளவு தரித்திரப்பட்டுப் போய்விடவில்லை ! பரி சி ல ர் க ள் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் எல்லாம் சோறு கிடைக்கும் என்ற பொருளே கடைசி ஆறு அடிகளில் பேசப்படுகிறது. என்ன காரணத்தால், பாட்டியாரைப் பாராமல் அதியமான் இருந்துவிட்டான் என்பதை நாம் இன்றும் அறிய மு டி ய வி ல் ைல. ஆனால் அச்செயலால் தம் மு ைட ய மானமே போய்விட்டதாகப் பாடும் பாட்டியாரது பாடல் உலக இலக்கியத்தில் வைத்து மதிக்கத் தக்கதாய்த் தோன்றிவிட்டது !