பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மகளிர் உவமைகள் இலக்கியத்தில் உவமை என்ற ஒன்று காணப்படும். கண்டதோர் பொருளைக் கொண்டு, காணாத பொருளை அறிவிப்பதற்காகவே உவமை ஆதியில் உண்டாகியிருத்தல் வேண்டும். காட்டுப் பசுவைக் காணாத ஒருவனுக்கு வீட்டுப் பசுவைக் காட்டி, இது போலத்தான் காட்டுப் பசுவும் இருக்கும், என்று கூறவேண்டிய நிலையில், ஆ போலும் ஆமா என்று கூறியிருப்பர். 'ஆ' என்பது வீட்டுப் பசுவையும், ஆமா என்பது காட்டுப் பசுவையும் குறிக்கும். விளக்கம் ஒன்றையே கருதி, ஆதியில் பயிலப் பட்ட இவ்வுவமை நாளாவட்டத்தில் இலக்கியத்தில் ஒப்பற்ற ஒர் உறுப்பாய் அமைந்துவிட்டது. தமிழ்க் கவிதை உவமைக் கருவூலம். சங்கப் பாடல்கள் தொட்டு, இன்றைய பாடல்கள் வரை உவமை இல்லாத கவிதைகளே இல்லையென்று கூறிவிடலாம். உவமை கூறுவது என்பது மிகவும் பழைமை வாய்ந்த தாயிருப்பினும், ஏறத்தாழ அனைவராலும் பயன்படுத்தப் படினும், அனைவர் உவமையும் சிறந்துவிடுவதில்லை. சிறந்த உவமை கூறும் இயல்புடைய புலவர் ஒரு சிலரே ! ஏனையோர் உவமைகள் அறியப் பயன்படுமே தவிர, அனுபவிக்கப் பயன்படுவதில்லை. இன்னும் கூறப் போனால், ஒரு கவிஞன் பயன்படுத்தும் உவமையிலிருந்தே அவனுடைய அறிவுச் சிறப்பை நன்கு அறியலாம். பெண்பாற் புலவர்கள் உவமை கூறுவதில் மிகவும் சமர்த்தர்கள்.வீட்டினுள்ளும் ஊரினுள்ளும் காணப்பெறும்