பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 A மகளிர் வளர்த்த தமிழ் பொருள்களைக் கொண்டே இவர்கள் உவமை கூறிவிடு வார்கள். ஆனாலும், என்ன அழகு அதில் இதோ சில வற்றைக் காணலாம் : அதியமான் நெடுமான் அஞ்சி மிகப் பெரிய வீரன். வீரர்கள் நிறைந்துள்ள தமிழ் நாட்டில் அவன் ஒரு தனி வீரனாய் உள்ளான். அவனைப்பற்றி நாம் கூறுவதாயிருப்பின், சிறந்த வீரன்’ என்று கூறுவோம். இன்னும் அதிகமாகக் கூறினால், வீரர்க்குள் ஒரு வீரன்’ என்னலாம். அதற்கு மேல் யாது கூறமுடியும் இதோ, பாட்டியார் (ஒளவையார்) கூறுகிறார். பாட்டியார் பல ஊர்கள் சுற்றித் திரிபவர். எல்லா ஊர்களிலும், எல்லா வகையான மக்களிடத்தும் அவருக்குப் பழக்கம் உண்டு. தொழில் செய்து வாழ்பவர்களிடம் பாட்டிக்குத் தனி மதிப்பு உண்டு.தொலாளர்களைக் கண்டு பழகிய பாட்டியார், ஒரு தச்சன் மேல் அளவற்ற மதிப்புக் கொண்டிருந்தார். அவன் தொழில் துணுக்கத்தையும், கை வேகத்தையும், அறிவின் திறத்தையும் பாட்டியார் கண்டு வியந்து நின்றுள்ளார், பல சந்தர்ப்பங்களில். நாள் ஒன்றுக்கு எட்டு முழுத் தேர்களைச் செய்யும் பழக்கமுடை யவன் அவன். தினந்தோறும் எட்டுத் தேர்கள் செய்யும் தன் வன்மை, அறிவு, செயல், திறம் எல்லாவற்றையும் காட்டி, நாள் கணக்குப் பாராமல் கலை என்ற முறையில் ஒரு தேரைச் செய்ய முடிவு செய்தான் அவன். ஒரு மாத காலம் சென்று விட்டது. - - ஆனால், தச்சன் நாள்தோறும், இரவும் பகலும் அதே வேலையாய்த்தான் இருந்தான். தேர் முடிவு பெறவில்லை. ஏன் ? தேரின் சக்கரம் ஒன்றுதான் உருவாகியிருந்தது. எட்டுத் தேரை ஒரு நாளில் செய்யும் தச்சன் தன் முழுத் திறனையும் ஒரு மாத காலம் காட்டிச் செய்த பொருள், தேர்ச் சக்கரம் ஒன்றுதான் அவ்வாறாயின், அந்தச் சக்கரம் எவ்வாறு இருக்கும் ? எத்துணை வலுவும், கலைச் இறப்பும், தொழில் நுனுக்கமும் அதனிடம் காணப்படும்