பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 85 அந்தச் சக்கரம் பார்வைக்கு ஏனைய சக்கரங்கள் போலக் காணப்படினும் அலாதியான சிறப்புடையதன்றோ ? அத்தகைய சக்கரம் போன்றவனாம் அதியமான். இதோ பாடலைப் பாருங்கள் : 'களம்புகல் ஒம்புமின் தெவ்விர் ! போர்எதிர்ந்து எம்முளும் உளன.ஒரு பொருநன் வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே !! (புறம் 87) [களம் புகல் ஒம்புமின்-போர்க் களத்தில் நுழையா தீர் : தெவ்விர்-பகைவர்களே ; போர் எதிர்ந்து-போர் செய்ய ஏற்றுக்கொண்டு; எம்முளும் உளன் ஒரு பொருநன் -எங்களிடமும் ஒரு வீரன் இருக்கிறான் ; வைகல்-தினந் தோறும்) ஒரு மாதம் முயன்று செய்த தேர்க்காலை அதிய மானுக்கு உவமையாகக் கூறியமையின், அவன் உடல் வலிமை மட்டும் அல்லாமல், மன வலிமையும் உடையவன் என்பதும், போரை ஒரு கலையாகவே வளர்த்துள்ளான் என்பதும் விளங்க வைத்துவிட்டார் ஒளவையார். பாட்டியாரது பாடல் எத்தகையதாய் இருப்பினும், அதனை அன்புடன் ஏற்றுக் கொள்ளுகிறானாம் அதியன். ஏன் தெரியுமா ? அவரிடத்தில் உள்ள எல்லை மீறிய அன்பி னால் இதை ஒர் உவமையால் கூறுகிறார் பாட்டியார். நேரங் காலம் இல்லாமல் சில குழந்தைகள் நொச்சு நொச்சு என்று பேசிக்கொண்டேயிருக்கும். - ஐந்தாண்டுகள் நிரம்பிய பின்னருங்கூடச் சில குழந் தைகள் மழலைமொழி பேசும், கேட்பவர் சிரிக்கும் நிலையைத் தாண்டி எரிச்சல் கொள்ளும் நிலையையும் அடைந்து விடுவர். ஆனால், அந்த மழலை மொழியில் பெற்றோர் இன்பங் காண்பர். இம்மனத் தத்துவத்தை நன்கு உணர்ந்து, பெற்றவரே பிள்ளை அருமை.ை