பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 A மகளிர் வளர்த்த தமிழ் அறிவர் என்பதைக் காட்டவே, இந்த அழகான கருத்தை உவமையாக வைத்துப் பாட்டியார் பாடுகிறார் : "யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருள் அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லும் அன்ன... நெடுமான் அஞ்சிநீ அருளன் மாறே." (புறம். 92) இசையோடு பொருந்தாமலும், நேரங்காலமில்லா மலும் பேசப்படும் பேச்சு என்பதே முதலடியின் பொருள். ஒப்பற்ற கவிதை பாடும் ஒளவையார் தம்முடைய கவிதை எவ்வாறு இருப்பினும், அதியன் அன்பால் அவற்றை ஏற்றுக்கொள்கிறான் என்று உவமை கூறும்போது, அவருடைய அடக்கமும், தற்பெருமையும், இனிமையும் நன்கு விளங்குதல் காணலாம். அவர் பயன்படுத்திய உவமை அவருடைய பண்பாட்டை விளக்குதல் தெளிய லாம். என்றைக்குச் சென்றாலும், எத்துணை முறைகள் சென்றாலும், அதியமான் பரிசில் தரத் தவறமாட்டா னாம் ; வெறுப்பில்லாமல் தருவானாம். எனவே, அவ னிடம் பரிசில் பெறுதல் தவறாது என்று கூற வந்த பாட்டி யார் பயன்படுத்தும் உவமை மிக்கச் சிறப்பு வாய்ந்தது : கோயில் யானைகளைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித் திருக்கலாம். அது கட்டியிருக்கும் இடத்திலிருந்து தினந் தோறும் கோயில் வாயிலுக்குச் செல்லும். அப்பொழுது பெரிய நாணல் கட்டு ஒன்றைத் தன் கொம்புகளின் இடையே துதிக்கையால் இடுக்கிக்கொண்டு செல்லும். அந்தப் புல் கட்டை அது வேண்டும்பொழுது தின்னும். ஒருமுறை அதன் கொம்புகளின் இடையே வைத்த உணவு வாயிற் செல்லாமல் தப்புவதில்லை அன்றோ ? சிறிது பொறுத்து உண்டாலும், உடனே உண்டாலும் அதன் உணவு அதற்கே பயன்படும் அது போல, அதியன் தரும் பரிசில் தப்பவே தப்பாதாம் : -