பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் A 91 கும் இடையில் நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியர்கள் வெற்றி பெற்ற பல சமயங்களில் ஆங்கில மக்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதைச் செய்தித் தாள் படிக்கும் பலரும் அறிவர். உலக சோதரத்துவத்தை வளர்ப்பதாகக் கூறப்பெறும் கிரிக்கெட் ஆட்டத்திற் கூடத் தம் ஊரவரைப் பிற ஊாரர் வெல்வதை அவ்வூரார் விரும்புவதில்லை என்றால், வேறு என்ன கூற வேண்டும் ? இன்று காணப்படும் இக்குறுகிய மனப்பான்மை அன்றையத் தமிழ் நாட்டில் ஓரளவு இருந்ததை யாரும் குறை கூற மாட்டார். நக்கண்ணையார் வீ ட் ைட அடுத்துள்ள மன்றில் நடைபெற்ற மற்போரைக் காணலாம், வாருங்கள் ! இதோ, போர் தொடங்கி விட்டது. உள்ளுரைச் சேர்ந்த வீரன், அவ்வூரிலேயே சிறந்த மல்லன் என்று பெயரெடுத்தவன். அவ்வூரில் மட்டும் என்ன ? அந்தச் சுற்று வட்டாரத்திலேயே அவனை வெல்லக் கூடிய வீரன் இல்லை என்றே கூறிவிடலாம். இதுவரை எத்தனையோ மற்போர் நடைபெற்றுங் கூட அவனே வெற்றி மாலை சூடினான். இந்தச் சூழ்நிலையில், எங்கோ ஒர் ஊரைச் சேர்ந்த ஒரு வீரன் இந்த ஊருக்கு வந்து, இந்த உள்ளூர் வீரனுடன் போராடப் போவதாகவும் அ றி வி த் து விட்டான். இச் செய்தி காட்டுத் தீப்போலப் பரவி விட்டது. கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும் ! ஒரே ப்ெரிய கூட்டம் ! - புதியவனாய் வந்துள்ள வீரன் யார் ? பேரும் புகழும் உடையவனா அவன் ? யாருக்குத் தெரியும், அவன் யார் என்று ? செய்தித் தாள்களும், தபால் முதலிய வசதிகளும் இல்லாத அந்த நாட்களில் இவ்வீரன் வேறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் அதை அறிந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை அல்லவா ? வந்தவனாவது, பலரும் அறியும்படி தன்னுடைய வீரத்தைப் பற்றியும், தான்