பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதி பாதை -0 எட்டையாபுரத்திலே, தேசீயக்கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு, அழகிய மண்டபம் அமைத்துச், சீரிய முறையில் விழா நடத்தினர். பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர் வத் தீ கொழுந்துவிட்டெரியும் உள்ளத்துடன் வாழ்ந்த வர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத்தனத்தார். நடை விதித்ததால், புதுவையில் தங்குப், புதுப்பாதை வகுத்தார் பாரதியார். அவருக்குக் 'காணிக்கை' செலுத்த ஆட்சி அலுப் பையும் பொருட்படுத்தாது, ஆச்சாரியார் வந்தார்- ஆயிரக் கணக்கான தமிழர்கள் கூடினர்-இசைவாணர் கள்- கலைவாணர்கள் - எழுத்தாளர்கள் பற்பலர். கல்கி' ஆசிரியர்,இப்பணியினைத் திறம்பட கடத்தி முடித்தார். விழாச் சொற்பொழிவுகளில், நாவலர் பாரதியார், சிவஞானக் கிராமணியார், ஜீவானந்தம், நாமக்கல்லார், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. தூரன் ஆகிய பலரும் கலந்துகொண்டனர். நண்பர் சிவஞானம் பெருமிதத்துடன் கூறிஞர், அதிகாரமற்ற கரம் அஸ்திவாரக்கல் நாட்டுகிறதே என்று, முன்பு ஆயாசப்பட்டேன் இன்றோ, ஆளும் கரம், மணிமண்டபத்தைத் திறந்துவைத்தது கண்டு 3

25

25