பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகமகிழ்கிறேன்" என்று. உண்மை. வங்கமாளும் ஆச் சாரியார், மணி மண்டபத்தைத் திறந்தார். வறுமையாள ராகக் கவனிப்பாரற்று, நாடு கடத்தப்பட்டு நலிவுற் றிருந்த பாரதியாருக்கு, நாடு முழுவதும் கொண்டாடும் அளவினதான விழா கடந்தேறியது. பாரதியாரின் கவிதைத்திறன், அதனாலாய பயன், மறுக்கமுடியா தன. பாரதியாரின் தனிப்பண்புகளை, அவரை அந்நாளில் அறிந்தவர்கள் கூறிடக் கேட்டால், புதுஉலகு காண விழைபவர்களின் அகமெலாம் மகிழும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பாரதியாரைக் குறித்துப் பேச ஆரம்பித்தால், அவருடைய கண்களிலே ஓர் புத் தொளி தோன்றிடக் காணலாம். பாரதியாரின் காலம் வேறு; இக்காலம் வேறு. எனவே, இன்றுள்ள எண்ணங்களை எல்லாம் அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்கவேண்டுமென்றே, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய-திராவிடப் பிரச்சினையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றே நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவரு டைய பாடல்களிலே பல இடங்களில், அவர், 'ஆரியர்' என்ற சொல்லை, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக் காலம், நாமெல்லாம் பள்ளிகளில் 'ஆரிய மத உபாக்கியானம்' எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நம் தலைவர், தமிழ் நாட்டுக் காங்கிரசிலே பெருந் தலைவராக இருந்த காலம். ஆரியர் - திராவிடர் பிரச்சினை, ஓர் ஆராய்ச்சி-வர லாறு. இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை.

26

26