பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆரியம் என்பது, ஓர் வகைக் கலாச்சாரம்- வாழ்க்கை முறை. திராவிடம், அதுபோன்றே, தனியானதோர் வாழ்க்கை முறை. இது, இன்று விளக்கமாக்கப்படுவதுபோல, பாரதி யாரின் நாட்களில் கிடையாது. பல ஜாதி- பல தெய்வ வணக்கம் பற்பல வித மான மூட நம்பிக்கைகள் - தெய்வத்தின் பெயர்கூறித் தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு- இவைதாம் ஆரியம்! 'ஒன்றேகுலம்,ஒருவனே தேவன்' இது திராவிடம். இரண்டிலே எது நல்லது? எந்தக் கலாச்சாரத்துக்கு நீர் ஆதரவு தருவீர்? என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர் திராவிடக் கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார். அவருடைய பாடல்களில்-பிற்காலப் பகுதிகளில் - இந் தச் சூழ் நிலை இருக்கக் காணலாம். பாரதியார் விஷயத்தில் பகுத்தறிவாளர்களுக்கு குள்ள மதிப்பு, முதலில், பரம்பரை வழக்கப்படி அவர் தேவியின் வரப்பிரசாதம் பெற்றதாலோ, முனிஸி அரு ளாலோ, பஞ்சாட்சர உபதேசப்பலனாலோ, பாட ஆரம் பித்தார் என்று அருட்கவியாக்காது விட்டார்களே, அதுதான். நாமகளைத் துதித்தார் - நாலைந்து ஆண்டு- பலன் இல்லை. பிறகோர் நாள், 'அம்மே! இனி நான் உயிர்

27

27