பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழேன்' என்று கூறி,நாவை அறுத்துக்கொள்ளக் கிளம்பினார்; உடனே களுக்கென ஓர் சிரிப்பொலி கேட் டது; அம்மை பிரசன்னமாகி, 'பாலகா! பாடு!' என்றாள்- உடனே அவர் பாடலானார்-பாடினார், பாடினார்,பார் முழுதும் பாடல் பரவும்வரை பாடினார் என்று, பாரதி யார் புராணம் கட்டாதவரையில், நமக்கெல்லாம் மிகக் களிப்பு! நமக்குக் களிப்பு என்பது மட்டுமல்ல, பாரதி யாருக்கே உண்மையில் பெருமை. அவர் நாமகள் பூமகள் அள்ளது வேஜேர் தேவனின் அருள் பெற்றலால்லர்: அவர் ஓர் கவி, சிந்தனையில் பட்டதைச் செந்தமிழில் கவிதை யாக்கினர் என்பதனுந்தான். கூடுமானவரையில், பாரதி விழாச் சொற்பொழி வாளர்கள். அவருடைய அருமை பெருமைகளை எடுத் துரைக்கையில், 'புராணம்' பேசாதிருந்தது பற்றி நாம் மகிழ்கிறோம். அன்பர் ஆச்சாரியார் மட்டும், பாரதி யாரை, ஓர் 'முனிவர்' என்று கூறினார் ஆனால் அதற்கும், அவர் வழக்கமான பொருள் கூறத் துணியார். பாரதியாருக்குள்ள பெருமை, முதலில் இது. மற் றோர் பெருமை, அவர், தம்முடைய நாட்களிலே, மற்ற வர்களை ட வேகமாக முன்னேற்றக் கருத்துகளைப் பாடி, அதன் பயனாக அவருடைய சமூகத்தாராலேயே வெறுக்கப்பட்டு, "பார்ப்பனமேதைகள்" என்போரால் அலட்சியப் படுத்தப்பட்டு, வறுமையில் வாடி, அன்னிய ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு ஆளாகி, அல்லலை அனுபவித்து, அந்த அல்லலால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல் அரைக்க அரைக்க மணக்கும் சந்த னமானாரே, அந்தப் பண்பு.

28

28