பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவருடைய பண்பு, ஜாதிக்கட்டுக்களை உடைத் தெறியக் கூடியதாக இருந்தது என்பது, அவருடைய கவிதைகளிலே, பல ரசமான இடங்களில் தெரிகிறது. அவருடைய நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அந்த நாட்களில் கையாண்டி செய்யப்பட்டது! இன், அவருக்கு மகாகவி என்ற பட்டம் தரவும், பளிங்கு மண் டபம் கட்டவும் தமிழகம் முன் வந்தது! கவிஞரைப் போற்றும் மாண்புக்கும், அதைக் கவர்ச்சிகரமான முறையிலே நடத்திக்காட்டிய கல்கியின் நிறமைக்கும், நமது பாராட்டுதல். "பாரதி மண்டபத்தை, விழாவுக்காகப் போடப்பட்டபந் தல் மறைத்துக்கொண்டிருக்கிறது" என்று,அன்று ஆச் சாரியார் பேசினார். மண்டபத்தைப், பந்தல் மறைக்கிறது ! மண்டபத்தை மட்டுமல்ல! தேசியக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே பெரிதாக்கி நாட்டிலே பரப்பிக் காட்டுவதால் பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரியவொட்டாதபடி மறைக் கப்படுகிறது ! பாரதியார், தோத்திரப் பாடல்கள் பல பாடினர். ஆனால், தேவார திருவாசகமும், திருவாய் மொழியும் பாடியானபிறகு பாடினார். எனவே, அவருடைய கவிதைகளிலே, தோத்திரப்பகுதி முக்கியமோ, அவரு டைய, பெருமைக்குச் சான்றோ ஆகாது, வைதீகர்களின் நோக்கத்தின்படியேகூட,

29

29