பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார், வேந்தாந்தப் பாடல்கள் பல பாடியுள் ளார். ஆனால் அவருக்கு முன்னர்த் தாயுமானாரும் வள்ள லாரும் பாடிவிட்டனர். எனவே, அந்தப் பகுதியும் பழம் பதிப்புப் போன்றதுதான். அவருடைய நாட்டுப்பற்றுப் பாடலே, அவருடைய கவிதைகளில் மிக முக்கியமான-மற்றக் கவிகள் பாடாத காலத்திற்கேற்ற பலன் அளித்த பகுதி. விடுதலைப்போர் புரிய அவருடைய கவிதைகள் தக்க கருவியாயின. எனவேதான், வெள்ளையன் வெளியேறிய விழாவுக்கு அடுத்ததாக, பாரதி மண்டபத் திறப்புவிழா நடைபெற்றது. ஆச்சாரியார் சொன்னுர், "அன்னிய ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல களிகல் பாடல்கள் இயற்றினர். தமிழச்களுக்கு தமிழ்க் கவிதானே பயன்பட முடியும்? பாரதியார், அந்த வகையிலே தமிழருக்குப் பயன்பட்டார்" என்று. ஆகவே, பாரதியாரின் பக்திப்பாடல் வேதாந்தப் பாடல் இவைகளைவிட, நாட்டுப்பற்றுப் பாடலே மகத் தான பலன் தந்தது! விழாக் கொண்டாடின அன்பர் கள் இந்தப் பகுதியைத்தான் விளக்கினார்கள் விஸ்தார மாக. மதுரை முஸ்லீம் தோழர் ஒருவர், "பாரதியாரின் பாடல் ஆங்கிலேயரை ஒட்டிய அணுக்குண்டு" என்று கூறினார். தமிழகத்திலே காங்கிரசின் வெற்றிக்குப் பாரதியார் பாடல் மிகமிகத் தாராளமாகப் பயன்பட்டது. பயன்படுத்திக்கொண்டு பாராளும் அளவு உயர்ந்த பலர், பாரதியாரை ஏதோ ஓர் சமயத்திலே மட்டும் எண்ணுவ

30

30