பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேசீயப் பாரதியின் உருவம் இத்தனை பாரதிகளை மறைக்கிறது, ஆச்சாரியார், பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று கூறினாரே அதுபோல! பெரியபந்தல், விழாவுக்காக. மண்டபமோ கவியின் பெருமைக்குரிய சின்னம். விழா முடிந்ததும் பந்தலைப் பிரித்துவிடுவார்கள் - மண்டபம் நின்று அழகளிக்கும். அதுபோல், பாரதியாரின், தேசியக்கவிதை,' அன்னி யரை ஓட்டும் அரும்பணிக்காக மட்டுமே அமைவது. அந்தக் காரியம் முடிந்ததால், இனி அந்தப் பந்தலுக்கு அவசியமில்லை. அவகியமில்லாததால் அது எடுபடும். அது எடுபட்ட பிறகுதான், பாரதியாரின் மனம் தெரி யும். பாரதியாரின் முழு உருவமும் தெரிய, அவருடைய களிதா சக்தியின் முழுப்பயனையும் பெற, அப்போது தான் முடியும். இனியும் மேடைகளிலே ஏறி, 'தாயின் மணிக் கொடி பாரீர்' போன்ற தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிப் பயனில்லை. தாயின் மணிக்கொடி பார்க்கினேம்; இங்கே காயும் வயிற்றையும் காண்பீர் என்று, மக்கள் முழக்க மிடுவர் ! எனவே, எந்தப் பகுதியை மட்டும் அதிகமாகப் போற்றி நாட்டுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அந்தத் தேசீயப் பாடல் பகுதிக்குள்ள பயனும் ஜொலிப்பும், இனி இராது! ஆகவே, பாரதி பயன் இல்லையா?அல்ல, அல்ல! பயனுள்ள பகுதி, பலரறியாப் பாரதி! மறைக்கப்பட்ட பாரதி, இனித்தான் மக்களுக் குத் தெரியவேண்டும். தேசீயக் கவிக்கு அப்பால்

32

32