பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்று சோகிக்கிறார் பாரதி! ஏன் நிலைகெட்டுவிட் டது? தேசியக் கவியாகமட்டும் இருப்பின், பரங்கி பிடித்தாட்டப் பாரதநாடு பரதவித்தது என்றுமட்டுமே கூறுவார். ஆனால், பலருக்குத் பலருக்குத் தெர்யவிடாதபடி. மறைக்கப்பட் டிருக்கும் முழுப்பாரதி, பேசுவதைக் கேளுங்கள். "அஞ்சி அஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே! வஞ்சனை பேய்களென்பார் இந்த மரத்திலென்பார் அந்தக் குளத்திவேன்பார்! துஞ்சுது முகட்டிலென்பார்!- மிகத் துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்! மந்திரவாதி யென்பார்-சொன்ன மாத்திரத்திலே மனக் கிலி பிடிப்பார்! யந்திர சூன்யங்கள் - இன்னும் எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!" 0 e சாடுகிறார், சாடுகிறார், மூட நம்பிக்கைகளை! "கொஞ்சமோ பிரிவினைகள்?- ஒரு கோடி யென்றால் அது பெரிதாமோ? ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன்; ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால், நெஞ்சு பிரிந்திடுவார்- பின்பு கெயோள் இருவரும் பகைத்திருப்பார்" இங்ஙனம், சமுதாயத்திலே உள்ள கேடுகளை- மன திலேயுள்ள தளைகளை-மூடக்கொள்கைகளைத் தாக்கு கிறார், தமது கவிதா சக்தியைக்கொண்டு!

36

36