பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'பாரதியாரா?' என்று ஆச்சரியத்துடன் நாடு கேட் கும், அவர் சொன்ன தத்தனையும் சொல்லப்போனால்! ஆனால், அந்தப் பாரதியாரை, அரும்பாடுபட்டு மறைத் திருக்கிறார்கள்! "பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே!" என்ற ஒரு வரியைக்கூட, அவர் சொன்னதாகச் சொல்ல அஞ்சி மறைத்தனர், அருந்தமிழ் நாட்டவர் தான்! பாரதியார், அந்தச் சமுதாயத்தை மேலும் என் னென்ன கூறினார் என்று தெரிந்தால்தானே, பாரதி யாரின் முழு உருவம் தெரியும்? "இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்-அவர் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார்! பிள்ளைக்குப் பூணூலா மென்பான்-நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்! பேராசைக்காரனடா பார்ப்பான்!-ஆனால் பெரியதுரை என்னில் உடல் வேர்ப்பான்! யாரானாலும் கொடுமை செய்வான்!- பணம் அள்ளி இடவில்லை யெனில் வைவான்!" மகாகவி பாரதியின் வாக்கு, பேராசைக்காரனடா பார்ப்பான்! என்பது. மேடைகளிலே கேட்டதுண்டா? பாரதி சிறப்புவிழாக் கூட்டங்களிலே, இந்தப் பாரதி தெரிந்தார? இல்லே! அவர் மறைந்திருக்கிறர், மண்ட பம் பந்தலால் மறைக்கப்பட்டிருப்பதுபோல! விழா முடிந்தது; பந்தலும் பிரிக்கப்பட்டது; மண்டபம் தெரி கிறது என்பது போல, வெள்ளையர் வெளியேறும் விழா முடிந்தது. இனித், தேசியக் கவிதை அலங்காரத்

37

37