பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தைக் கடந்து நிற்கும், பாரதி காணவிரும்பிய புது சமுதாயம்! "ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை, ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்போர் இந்தியாவில் லையே" என்ற இலட்சியம் ஈடேறிய விலைபெற்ற சமு தாயம், மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்க மில்லாத சமுதாயம், பழமை மோகத்தில் படியாத சமுதாயம், காசியில் பேசுவதைக் காஞ்சியிலுள்ளோர் கேட்பதற்கான கருவி செய்யும் சமுதாயம், அத்தகைய புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி நிற் கிறார். ஆனால் அவரைப், பந்தல் மறைத்துக்கொண் டிருக்கிறது! அவரை, நாட்டுக்குத் தெரியவிடாதபடி செய்வதில், பலருக்கு இகாபம் இருக்கிறது எனவே. தேசியக் கவிமட்டுமே தெரியவேண்டும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்வாரி அனுல், அந்த எண்ணமும் ஈடேறுவதற்கில்லை. மக்களுக்குத் தெரிய ஒட்டாது அவர்கள் மறைத்து வைத்துள்ள பாரதியார், உண்மை யில் மறைந்துவிடவில்லை. அதோ பாடுகிறார், கேளுங் கள். "இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி இருக்கின்ற தென்பாலும்....." இது பாரதிதாசன் குரல் அல்லவா? என்பீர்கள். ஆம்! பாரதிதாசன்தான்! அவர்தாம், மணிமண்ட பத்தைவிட விளக்கமாக, முழுப் பாரதியைத் தமிழகத்

38

38