பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகா கவி பாரதியா பாரதியார் உலககவி ! - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்! ஒரூருக் கொருநாட்டுக் குரிய தான ஒட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர். மற்றும், வீரர் அவர்!- மக்களிலே மேல்கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்! சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற திவ்யநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம். அகத்திலுறும் எண்ணங்கள், புவியின் சிக்கல் அனுப்பலைகள் புதியவைகள். அவற்றையெல்லாம், செகத்தார்க்குப் பாரதியார் இத்தி ளிப்பாச் தெளிவாக, அழகாக, உண்மை யாக! முகத்தினிலே களையிழந்த மக்கல் தம்மை முனைமுகத்தும் சலியாத வீர ராக்கப் புகுத்துமொளிப் பேச்செல்லாம், கங்கை யாற்றுப் புனல்போலத்தொடர்வதுண்டாம் அன்னூர்பாட்டில்!

5

5