பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பழவாடை, பழங்கவிதை, பழந்தமிழ்தால், பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை! பொழிந்திடு சன் னத்த உள்ளம் கவிதை யுள்ளம் பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள், அழுக்தியிருக் திட்டதமிழ் எழுத்த தென்றே ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னைமீதில்! அழகொளிசேர் பாரதியார் கவிதைதன்னை அறிந்திலதே புளிஎன்றல், புவிமேற் குத்தம் | கிராமியம் நன் னாகரிகம் பாடி வைத்தார்; கீர்த்தியுறத் தேசீயம் சித்தி ரித்தார்; சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார். தங்குதடை யற்ற உள்ளம், சமத்வ உள்ளம், இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம், இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்! தராதலத்துப் பாஷைகளில், அண்ணல் தந்த தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும்சேதி ! ஞானரதம் போலொருநூல் எழுதுதற்கு நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப் போகவிலக் கற்பனைக்குப் போவதெங்கே? புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே தேனினிப்பில் தருபவரியா?? மற்றும் இக்கான், ஜெயபேரி கைகொட்ட டாஎன் றோதிக் கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம் கொட்டிவைத்த கவிதை திசை எட்டும் காணோம்!

6

6