பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச் சே"யென்று பாரதியார் பெற்ற கீர்த்தி, போய்ப்பாழும் கிணத்றினிலே விழாதா என்று பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத்தார்கள் வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென்பார்கள்; வீணாக 'உலககவி' அன்றென் பார்கள். ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவனைப்போய் உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்! சாதிகளே இல்லையடி பாப்பா என்றர்! தாழ்ச்சி உயர்ச்சிகள் சொல்லல் பாவம் என்றார். சோதிக்கின் "ஆத்திரற்கோர் வீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர்தி ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்! ஒடுக்கப்பட்டார் நிலைக்கு வருந்தி நின்றர்! பாதிக்கும்படி "பழமை பழமை என்பீர்; பழமை இருந் திட்டநிலை அறியீர்" என்றார். தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச் சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்! காசு தந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும் சிற்றுணவு வாக்கி, அதைக் கனிவாய்த் தின்னர் ! பேசிவந்த வசைபொறுத்தார்! நாட்டிற் பல்லோர் பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால் முரசறைந்தார். இங்கிவற்றால் வறுமை ஏற்றார்!

7

7