பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 என்ன பலன் கிடைத்தது? 82 பிராயத்தில் இங்கே வந்து நமது நம்பிக்கையெல்லாம் முற்றிலும் வீணுய்விட்டன வென்று நம்மிடத்தில் முறையிட்டார். ரீ கோகலே இன்னும் ஆசைகள் வைத்துக் கொண்டிருக்கிருர் என்பதை நான் அறிவேன். கோகலே என்னுடைய சிநேகிதர். ஆகையால் அவர் தாம் வெளியிடும் எண்ணத்தை வாஸ்தவ மாகவே உடையவராயிருக்கிருர் என்று நான் நம்புகிறேன். கோகலேக்கு இன்னும் நிராசை பிறக்கவில்லை. ஆனல் இவரும் தாதாபாயைப் போல் 80 வயதாகும் பகடித்தில் இப்பொழுதிருக்கும் பிரிட்டிஷாரிடம் விகவாசத்தை இழந்து விடுவார். அவர் வாலிபர், என்னைக் காட்டிலும் வயதிலே குறைந்தவர். அதிகாரிகளிடம் ஒரே பேட்டியிலிருந்தேனும் அல்லது ஒரு வருஷத்திற்கு உள்ளே செய்யப்பட்ட பேட்டிகளிலிருந்தேனும் நிராசை ஏற்பட்டுவிடமாட்டா தல்லவா? தாதாபாய் நவுரோஜியே வி சு வா ஸ் ம் இழந்து விட்டாரென்ருல், கோகலே இன்னும் 20 வருஷங் களில் அந்த ஸ்திதிக்கு வரமாட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பிரிட்டிஷ் ஜனங்களுக்குள்ளே லிபரல் கட்சியின் கோட்பாடுகள் மறுபடியும் தழைக்கத் தொடங்கிவிட்டன என்று சிலர் சந்தோஷத்துடன் சொல்கிருர்கள். ஆனல் இது எத்தனை காலம் நிற்கும்? ஒருவேளை அடுத்த வருஷம் லிபரல் கட்சியார் அதிகாரத் தினின்றும் மாறிவிடலாம். அப்பால் மறுபடியும் லிபரல் கட்சி அதிகாரம் பெறும்வரை நாம் காத்திருப்பதா? பிறகு அது போய் விடுமானல் மூன்ரும் தடவை எப்போது வரும் என்று காத்திருப்போமா? இது இருக்கட்டும். லிபரல் கட்சியிருந்துதான் ந ம க் கு என்ன சாதித்துவிடப் போகிறது? இவ்விஷயமாக காங்கிரஸ் சபையின் தந்தை என்று கூறப்படும் மிஸ்டர் ஏ. ஓ. ஹியூம் 1893ம் வருஷத்