பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அரசாங்கம் என்ன செய்தது? வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணியசிவம், ஆகியோரைக் கைது செய்தது. சுதேசி பத்ம நாப ஐயங்கார் என்பவரும் கைது செய்யப்படடார். இவர்களை அரசாங்கம் கைது செய்த உடனே பொது மக்கள் ஆத்திரம் அடைந்தனர். போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கினர். முனிசிபல் ஆபீசைச் சூறையிட்டனர். இன்னும் பல்வேறு வகையில் தங்கள் கோபத்தை வெளி யிட்டனர். அரசாங்கம் என்ன செய்தது? துப்பாக்கி கொண்டு சுட்டது. பலர் இறந்தனர். வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம், சுதேசி பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவர் மீதும் வழக்குதி தொடுத்தது அரசாங்கம். பாரதியார் என்ன செய்தார்? பயந்தாரா? சும்மா இருந்தாரா? ஏனையோரைப் போல மெளனம் சாதித் தாரா? இல்லை; இல்லை. திருநெல்வேலிக்குச் சென்ருர்: சிறையில் இருந்த வ. உ. சி., சுப்பிரமணிய சிவம் முதலி யோரைக் கண்டார். தமது இந்தியா பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினர். "நான் ஞாயிற்றுக்கிழமை (26 ந்தேதி) மாலை திருநெல்வேலிக்கு வ்ந்து சேர்ந்தேன். வந்தவுடனே திருநெல்வேலியில் சுடப்பட்டு இறந்த சுதேசிகளின் பெயர்களை விசாரித்தேன். இங்குள்ள வக்கீல்களும், மற்ற பெரிய மனிதர்களும் இதுவரை இவ்விஷயத்தைப் பற்றி விசாரணை செய்யாமலிருப்பது வெகு ஆச்சர்யமாயிருக் கின்றது. அது சாமான்யமான விசாரணைக்குத் தகுதியற்ற விஷயமென்று நினைத்துவிட்டார்கள் போலும்! அதை