பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 இதற்கெல்லாம் தக்கபடி சம்பளத் திட்டம் அதிகரித்துக் கொடுக்கப்படவில்லை. என்ற போதிலும், வருமானம் போஸ்டாபீஸ் அதிகாரிகளுக்கு ஜாஸ்திபட்டே வருகிறது. உயர்ந்த சம்பளக்காரர்களின் (முக்கியமாக ஐரோப்பியர் களின்) பணப் பெட்டிகள்: நிரம்பிக்கொண்டும், கன்னங்கள் வீங்கிக் கொண்டும் வருகின்றன. கஷ்டப்பட்டு உழைக்கும் தபால் சேவகர் கதியை மட்டிலும் மேல் அதிகாரிகள் கவனிப்பது கிடையாது. 'எனவே, வியாழக்கிழமை பகல் ஒரு மணிக்கு 600 தபால் சேவகர்களுக்கு மேலாக ஒன்றுசேர்ந்து டைரக்டர் ஜெனரல் முன்பு சென்று தமது குறைகளைத் தீர்க்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்கள். அவர் சிற்சில அனு கூலங்கள் செய்து கொடுக்க இணங்கினர். இந்த நிபந்தனைகளே ஒத்துக்கொள்ள முடியாது என்றும், தமது துயரங்களனைத்தையும் நி வ tத் தி செய்தாலொழிய வேலைக்கு வர முடியாது என்றும் தொழிலாளிகள் கூறினர். அதன் பேரில், 500 போஸ்டல் சேவகர்களை டைரக்டர் ஜெனரல் தள்ளுபடி செய்துவிட்டார். மேற்படி 500 சேவகர்கள் என்ன செய்வார்கள்? இவ்வாறு தமது குறைகளேத் தீர்க்கும்படி வேண்டிக் கொண்டதற்கு அவர்களே வேலையை விட்டு நீக்கிவிட்டால், அவர்களுடைய குழந்தை குட்டிகளெல்லாம் எவ்வாறு தவிக்கும் என்பதை டைரக்டர் ஜெனரல் ஆலோசனை புரியவில்லை. "பம்பாய் தபால் சேவகர்களுக்கும் பெங்காளத்தில் ரயில் நிறுத்தம் செய்துள்ள ரெயில்வே காரர்களுக்கும் பலவிதங்களில் ஒற்றுமையிருக்கிறது. இரண்டு விஷயங் களிலும் முதலாளிகள் பிடிவாதத்தால் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் பூரண கஷ்டத்தை அடைந்திருக் கின்றன. யுரேஷியர்கள் அல்லது ஐரோப்பியர்கள் தொழில்