பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 இது கண்டு சீறினர் பாரதியார். அப்போது அவர் ஆசிரியராக விளங்கிய விஜயா பத்திரிகை பிலே ஒரு தலையங்கம் எழுதி வெளியிட்டார்: 'சூரத் காங்கிரஸ் சமயத்தில் திலகரையும், அவர் கூட்டத்தாரையும் கவர்ன்மெண்டார் அதம் செய்து விடுவார்கள் என்று சோதிடம் சொல்லி, அச் சோதிடம் பலனடையக் கண்டு மகிழ்ச்சி பெற்ற வி. கிருஷ்ணஸ்வாமி அய்யருக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைத்திருக்கிறது. ஆனல் அவர் அங்ங்ணம் சொல்லியது சோதிடம்தான அல்லது வேண்டுகோளா என்பது சந்தேகம். திலகரைச் சர்க்கார் அதிகாரிகள் சிறையிலிட்டு விட்டனர். திலகர் கூட்டம் என்று வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் யாரைச் சொல்கிருரோ, அவர்கள் ஒருபோதும் முடிவு பெறப்போவ தில்லை. பாரதநாடு முழுமையும் ஒரு விலக்குகள் ஒழிய திலகர் சிறை சென்றவுடன் ஆற்ருெளுத் துக்கமடைந்தது. இங்கிலாந்திலே பலர் திலகரைச் சிறையிலிட்டது பெரிய அநீதி என்கிருர்கள். ஐரோப்பாவில் நீதியபிமானம் கொண்ட பத்திரிகைள் எல்லாம் திலகர் தண்டனை அடைந்தது பற்றி வருத்தம் பாராட்டுகின்றன. உலகத்தில் எந்தப் பிரதேசத்திலும் இவ்விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்ட நிர்பrபாதமான ஜனங்கள் யாவராயினும் அவர்கள் எல்லாரும் திலகருக்கு விதித்த தண்டனை வெறும் அநீதி என்கிருர்கள். இவர்கள் எல்லாரும் திலகர்கட்டம் தான். சூரியனை அவித்தாலும் அவிக்கலாம். மேரு மலையை வெட்டி எறிந்தாலும் எறிந்து விடலாம், திலகர் கூட்டத்தை அதம் செய்ய முடியாது......... "ఐ. கிருஷ்ணசாமி அய்யரை நேராக விளித்துச் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிருேம்.