பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 "குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் நின்று போயிற்று. இரண்டு மாத காலம் இரவும் பகலு மாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம். பயம்! பயம்! பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருக்கிருேம். நீ கடைசியாகக் காப்பாற்றி ஞய். உன்னை வாழ்த்துகிறேன். "கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம்! குழப்பம்! தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! "வீட்டுக்கார செட்டியாருக்கு எத்தனைநாள் பொய் வாயிதா பொய் வாயிதா! தினம் இந்தக் கொடுமைதான? இத்:ே ஆயிரத்துத் தொளாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி அரவிந்தர் விடுதலை பெற்ருt; ஆயிரத்துத் தொளாயிரத்து பத்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுவை சேர்ந்தார். அவரது வருகை பாரதிக்கு அறிவிக்கப்பட்டது. புதுவையில் அரவிந்தர் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டுமே! எவருடைய வீட்டிலே அவருக்கு இடம் கிடைக்கும்? யோசித்தார் பாரதி. கலவை சங்கரன் செட்டியாரின் இல்லமே ஏற்ற இடம் என்று முடிவு செய்தார். கலவை சங்கரன் செட்டியாரைக் கலந்தார். முடிவு என்ன? கலவை சங்கரன் செட்டியார் இல்லத்தில் அரவிந்தர் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் பட்டன.