பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 ஒத்துழையாமைப் போர் தொடங்குமுன் மகாத்மா காந்தி சென்னை வந்திருந்தார். ராஜாஜியின் விருந்தின ராகத் தங்கியிருந்தார். மகாத்மாவைக் காண வந்தார் பாரதியார். மகாத்மா ஒரு கட்டில்மீது அமர்ந்திருந்தார். அருகில் ராஜாஜி நின்றுகொண்டிருந்தார். எதிரில் சத்தியமூர்த்தி நின்று கொண்டிருந்தார். அப்பால் அரங்கசாமி அய்யங்காரி இருந்தார். உள்ளே நுழைந்தார் பாரதியார்; மகாத்மா அருகே அமர்ந்தார். "மகாத்மா காந்தி! இன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நான் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு சேய்திருக் கிறேன். நீங்கள் அதிலே பேச முடியுமா?" என்று கேட்டார். மகாத்மா காந்தி மகாதேவ தேசாயைப் பார்த்தார். மகாதேவ தேசாய்தான் மகாத்மாவின் காரியதரிசி. அவர், தம் வசமிருந்த குறிப்பைப் பார்த்தார். 'இன்று மாலை மற்ருெரு நிகழ்ச்சி இருக்கிறது" என்ருர் மகாதேவ தேசாய். 'இன்று முடியாது. நாளே...' என்ருர் மகாத்மா. "நாளை முடியாது.” என்ருர் பாரதி. அங்கிருந்து புறப்பட்டார். பாரதி போய் விட்டார். 'இவர் யார்?' என்று கேட்டார் மகாத்மா. "இவர் எங்கள் கவி' என்ருர் ராஜாஜி. இந்த நிகழ்ச்சியை வ. ரா. குறிப்பிட்டிருக்கிருt. மகாத்மா அருகில் நின்றிருந்த அ ஃன வ ரு ம் பாரதியாரை அறிவர்,