பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஒருநாள், அவ்வழியே சென்று கொண்டிருந்தார் பாரதியார். அவரைக் கண்டார் திரு. வி. க. அழைத்து வந்தார்; நிலையத்தின் உள்ளே அமரச் செய்தார். அன்று கிருத்திகை. மாலை நேரம். பாலசுப்பிரமணியர் படம் ஒன்று நன்ருக அலங்கரித்து வைக்கப் பட்டிருந்தது. குத்து விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. முருகப் பெருமானை வழிபடும் பொருட்டுப் பலர் கூடியிருந்தனர். 'முருகன் மீது ஒரு பாட்டு" என்ருர் திரு. வி. க. பாரதியாரை நோக்கி. - அவ்வளவுதான். எழுந்து நின்று கொண்டார் பாரதியார். முருகன் படத்தையே சிறிது நேரம் உற்று நோக்கிய வண்ணம் நின்ருர். அந்தப் படத்திலிருக்கும் முருகனை வா வா என்று அழைப்பவர் போல கைகளை சைகை செய்துகொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் ஆவேசம் வந்தவர்போல் ஆனர். "வருவாய் மயில் மீதினிலே என்று பாடத் தொடங் கினர். பாட்டு மேலே மேலே ஏறியது. கேட்டவர் எல்லாரும் மெய்மறந்தனர்; உணர்ச்சி பொங்கினர். படத்திலிருந்த பாலசுப்பிரமணியன் அங்கிருந்து துள்ளி, வடிவேலுடன் வருவது போன்ற ஒரு மனோபாவம் ஏற்பட்டுவிட்டது. அப்படியே அனைவரும் பாட்டில் ஈடுபட்டனர். கண் எதிரே முருகன் வருவது போன்றதொரு தோற்றம் பெற்றனர். - கூறியவர் : திரு. வி. க. பாரதியார் நடக்கும்போது ஓர் இராணுவ வீரனைப் போலவே நடப்பார். இராணுவ வீரனைப் போலவே தமது கோட்டின் மீது பின் குத்திக் கொண்டிருப்பார். வலது