பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று முதல் இன்று வரை பாரதியார் இறந்தபோது அவருடைய குடும்பம் எந் நிலையில் இருந்தது? ஆதரவற்ற நிலையில் இருந்தது. பாரதி யாரின் மனைவி மக்கள் ஆகியோரின் வாழ்க்கைக்கு என் செய்வது? வழி யாது? வழி ஒன்றே. அதாவது, பாரதி பாடல்களைப் புத்தகமாக வெளியிட்டு விற்கலாம். விற்பனை யினின்றும் கிடைக்கக்கூடிய தொகையைக் கொண்டு பாரதியாரின் குடும்பத்துக்கு உதவலாம். இதுதவிர வேறு வழி எதுவும் தோன்றவில்லை. எனவே, பாரதியாரின் நண்பர் சிலர் கொண்ட கமிட்டி ஒன்று இதன் பொருட்டு நிறுவப்பட்டது. அதாவது 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். அடுத்த ஆண்டு முடிவதற்குள் பாரதி பாடல்களைப் பன்னிரண்டு புத்தகங்களாக வெளியிடுவது என்றும், முன் பணமாக ரூபாய் பன்னிரண்டு அனுப்பி சந்தாதாரர் களாகச் சேர்ந்துகொள்வோருக்கு இப் புத்தகங்களை அனுப்பி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுவிக்கப் பட்டது. பலன் என்ன ஏற்பட்டது? உற்சாகம் அளிப்ப தாக இல்லை. சிலர் முன்பணம் அனுப்பி ஆதரித்தனர். வேறு சில நண்பர்கள் இம் முயற்சிக்குப் பண உதவி செய் தார்கள். திலகர் சுயராஜ்ய நிதியிலிருந்து ஆயிரம் ம்ேபாய் வழங்கப்பட்டது.