பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 வேலைக்கு அமர்ந்தார்கள்: ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்ந்தார்கள். பட்டினியால் வாடிய இந்த மக்கள் அரை வயிற்றுக் கஞ்சி பெற்ருர்கள். வஞ்சனையின்றிப் பாடுபட்டார்கள். ஆனல், அந்த வெள்ளை முதலாளிகள் என்ன செய்தார்கள்? இவர்களே மனிதர்களாகவா நடத்தினர்கள்? இல்லை; இல்லை. நாயினும் கேவலமாக நடத்தினர்கள். பன்றி களைப்போல் நடத்தினர்கள். ஏழை இந்திய மக்கள்! எவரிடம் போய் முறையிடுவர்? எவரிடம் தங்கள் துயரத்தைக் கூறுவர்? கடல்கடந்த அந்தப் பகுதியிலே ஆதரவான வார்த்தை கூறுவார் எவர்? எவரும் இலரே! மனம் புழுங்கினர். இவர்களது நிலையறிந்த இந்திய தேசிய காங்கிரஸ் என்ன செய்தது? கிளர்ச்சி செய்யத் தொடங்கியது. இந்திய நாடு முழுவதும் கூட்டங்கள் நடைபெற்றன. கடல் கடந்த இந்தியர் நிலைபற்றி இக் கூட்டங்களில் எடுத்துக் கூறப்பட்டது. இந்த சமயத்திலேதான் "கரும்புத் தோட்டத்திலே என்ற பாடலைப் பாடினர் பாரதியார். பிஜித் தீவுக்கு ஆயிரக் கணக்கான இந்தியர்கள் சென்ருர்கள். அங்கேயுள்ள கரும்புத் தோட்டங்களிலே வேலைக்கு அமர்ந்தார்கள். அவர்களது வாழ்க்கை எவ்வளவு மோசமாயிருந்தது என்பதை இந்தப் பாடலிலே பாரதியார் எடுத்துக் காட்டியுள்ளார். அந்த நாளிலே, பொதுக் கூட்டங்கள்தோறும் இந்தப் பாடல் பாடப்பட்டது. நாடக மேடைகளிலே இந்தப் பாடல் பாடப்பட்டது. பாடலைக் கேட்ட மக்கள் கண்ணிர் சொரிந்தார்கள். வாய்விட்டு அழுதார்கள்.