பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ஒரு நாடு; செழிப்புமிக்க நாடு; செல்வம் கொழிக்கும் நாடு. அந்த நாட்டை ஆளும் அரசன் மிக்க புகழுடன் விளங்குகிருன். பிற நாட்டினர் பலர் வருகின்றனர்; அந்த அரசனே வணங்குகின்றனர்; பொன்னும் மணியும் கொண ந் து கொட்டுகின்றனர்;. புகழ்கின்றனர். இதனைப் பார்க்கிருன் வேறு ஒர் அரசன். இதயம் புழுங்கு கிருன்: பொருமையால் மனம் நைந்து போகிருன். தீச் செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து காம்-அவர் செல்வங் கவர்ந்தவரை விட வேண்டும் தெருவிலே என்று எண்ணுகி முன். செயல் நன்ருே, தீதோ எதுவாயினும் சரியே. செயல் பற்றிய கவலை அவனுக் கில்லை. அவனுடைய எண்ணம் ஒன்றே. அதாவது, அந்த நாட்டைக் கவர்தல் வேண்டும். அந்த நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொள்ள வேண்டும். அந்த நாடாள்வோரை அடிமை கொள்ளல்வேண்டும். அந்த நாட்டு எழிலரசியைத் துகில் உரிந்து மானமிழக்கச் செய்தல் வேண்டும். இதுவே அவனது ஆசை, இந்த ஆசை நிறைவேறுவது எப்படி? படைதிரட்ட லாமா; போர் தொடுக்கலாமா? பொருமை கொண்ட இந்த அரசனுக்கு ஒரு மந்திரி; துரிமந்திரி. அவன் என்ன சொல்கிருன்? வெஞ்சமர் செய்திடுவோ மெனில்-அதில் வெற்றியும் தோல்வியும் பார்கண்டார் என்று சொல்கிருன். போர் என்ருல் அதிலே வெற்றி பெற்ருலும் பெறலாம்: தோல்வி அடைந்தாலும் அடையலாம்.