பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 "அது நம் கையில் இல்லை. ஆகவே நிச்சயம் வெற்றி கிட்டக்கூடிய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." இவ்வாறு போதிக்கிருன் அந்த துன்மந்திரி. "தந்திரத் தால்-குதால்-அவரை வெற்றி கொள்ளவேண்டும்." என்கிருன். அதன்படியே குதினல் அந்த நாட்டைக் கவர்கிருன் செல்வத்தைக் கொள்ளை கொள்கிருன். நாட்டு மன்னரை அடிமை கொள்கிருன். அந்த நாட்டின் எழிலரசியை மானபங்கம் செய்கிருன். முடிவு என்ன? செல்வமும் நாடும் இழந்தவர் சீறுகின்ருர், அடிமை கொண்ட மன்னனைப் போரிலே மாய்த்து வஞ்சம் தீர்க்கச் சபதம் செய்கிருர். இழந்த நாட்டை மீட்கச் சபதம் செய்கிருர். அடிமைத் தளையை முறிக்கச் சூளுரைக்கிரு.ர். அந்த நாட்டு எழிலரசியும் அவ்வாறே சூளுரைக்கிருள். இவ்வளவில் கதை முடிகிறது. இந்தக் கதை எங்கே உளது? மகாபாரதத்தில் உளது. மகாபாரதக் கதையின் சுருக்கமே இதுதான். இந்தக் கதையை எடுத்துக்கொண்டு பாடுகிருர் பாரதி. பாஞ்சாலி சபதம் என்று இதற்குப் பெயர் சூட்டு கிரு.ரி. நமது கேள்வி இதுதான். பாரதக் கதை பழம் பெரும் கதை. நாட்டுமக்கள் அறிந்த கதை. ஒவ்வொருவர் வீட்டுத் திண்ணையிலும் பேசப்படும் கதை. இந்தக் கதையை பாரதி ஏன் பாடவேண்டும்? பாரதத்தில் கதைக்குத்தான பஞ்சம் எவ்வளவோ கதைகள் காணப்படுகின்றனவே! அவற்றில் ஏதாவது ஒன்றினை பாரதி பாடியிருக்கலாமே!