பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 'இது போன்றதொரு காவடிச் சிந்து பாட எவராலும் இயலாது" என்றனர் எட்டயபுரத்துப் புலவர். அப்போது கப்பையா அங்கே இருந்தான்; புலவர்கள் சொற்கேட்டுச் சிரித்தான். "சும்மா சிரிக்கக் கூடாது. உனக்குத் திறமையிருந் தால் இந்த மாதிரி ஒரு காவடிச் சிந்து பாடு பார்க்கலாம்" என்றனர் புலவர். "ஆகட்டும். அப்படியே பாடுகிறேன் பாருங்கள்' என்ருன் சுப்பையா. அன்று மாலையே ஒரு காவடிச் சிந்து பாடிக் கொண்டு வந்தான். புலவர்களிடம் படித்துக் காட்டினன். எல்லாரும் கேட்டனர்; மகிழ்ந்தனர். சுப்பையாவைப் பாராட்டினர். அந்தக் காவடிச் சிந்து பின்வருமாறு இருந்தது. பச்சைத் திருமயில் வீரன் அலங்காரன் கெளமாரன் -ஒளிர் பன்னிரு திண்புயப் பாரன் -அடி பணி சுப்பிரமணியர்க் கருள் அணி மிக்குயர் தமிழைத் தரு பக்தர்க் கெளிய சிங்காரன்-எழில் பண்ணும் அருளுசலத் தூரன்.

  • பெத்தண்ண தளவாய் என்பவர் கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் பயின்றவர். எட்டயபுரம் ஜமீந்தார் மீது ஒர் உலாமடல் பாடியிருந்தார். அந்த உலாமடல் மிகச் சிறந்த ஒன்று என்று புலவர் பலராலும் பாராட்டப் பெற்றது. அதுபோல் பாட எவராலும் இயலாது என்றனர் புலவர்.
  • கூறியவர்-எட்டயபுரம் குருகுகதாசப்பிள்ளை,