பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 வர்களின் வண்டி முன்னே குடல் தெரிக்க ஓடுவார்கள். சில தினங்களில் பல்லக்கு சவாரி நடக்கும். இன்னும் சில சமயங்களில் ஜமீந்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவ துண்டு. "ஆட்டு வண்டி', சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக் கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பகடிம் நாலு மடங்கு அதிக நிறை கொண்ட ஜமீந்தார் ஏறிக்கொண்டு, தாமே பயமில்லாமல் ஒட்டுவார். குதிரைகள் துஷ்ட ஜந்துக்கள். ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் கடி வாளத்தை மீறி ஒடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் சந்தேகமில்லை யல்லவா? இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம், ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது-தயார் செய்துக் கொண்டு வருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்த வுடனே, அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போகும். பிரக்கினை கொஞ்சம் தான் மிஞ்சியிருக்கும். எனினும் இவருக்குப் பயந்தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும், குதிரையை எப்படியாவது நகர்த்திக் கொண்டு போகவேண்டுமென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று, அதைத் தள்ளிக் கொண்டு போவார்கள். ஜமீந்தாரி கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்ருெரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார்; வாங்காச் சத்தத்துக்குக் குறைவிராது. இந்த வியவகாரம் ஒரு முறை நடந்தால், பிறகு மூன்று நான்கு வருஷங் களுக்கு இதை நினைக்கமாட்டார். அதற்கப்பால் மனுஷன் கடித்திரியனல்லவா? பயந்தெளிந்து பின்னெரு முறை 16