பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德奎8 தவன். இன்னும் பல காரணங்களுமுண்டு. ஆனல் பிரபுக்களின் தயவாகிய நதியின் மூலத்தை விசாரிக்க லாகாது. 'முத்திருளு, மற்றவர்களுடைய கவியும் சரி, உன்னு டைய வார்த்தையும் சரி, அவர்களுடைய கவி கேட்பதி லுள்ள சுகம் உன் பேச்சிலே இருக்கிறது" என்று ஜமீந்தார் தனது வேலைக்காரனை மெச்சினர். சபையிலிருந்த புலவர்களுக்கெல்லாம் அடிவயிற்றிலே எரிச்சலுண்டா யிற்று. இது முத்திகுளக் கவுண்டனுக்குத் தெரியும். ஜமீந்தாருக்குக்கூட ஒருவேளை தெரிந்திருக்கலாம். அப்படியிருந்தும் அவர்களெல்லோரும் தமது எரிச்சலை உள்ளே அடக்கிக் கொண்டு வெளிப்படையாக ஜமீந்தா ருடைய கருத்தை ஆமோதித்துப் பேசினர்கள். உபய வேதாந்த ஆச்சாரியர், "ஆமாம், மகாராஜா ஸ்மஸ் கிருதத்திலே பாணகவியைப் போல, நமது முத்திருளக் சவுண்டன். அவர் தமது காதம்பரியை வசன நடையிலே தான் எழுதியிருக்கிருர். அப்படியிருந்தும் பாட்டாகச் செய்யப்பட்டிருக்கும் எ த் த னை யோ காவியங்களைக் காட்டிலும் அதைப் பெரியோரிகள் மேலானதாகக் சொல்லியிருக்கிரு.ர்கள். ஆனல் பாணகவி உட்கார்ந்து புஸ்தகமாக எழுதினர். நமது முத்திருளக் கவுண்டன் சிரமமில்லாமலே பேசுகிற பாவனையில் அத்தனை பெரிய திறமை காட்டுகிருன். இவனே வசன நடையில் ஆசுகவி என்று சொல்லலாம்." என்று திருவாய் மொழிந் தருளினர். உடனே, முத்திருளன் அவரை விரலத்துடன் நோக்கி, "செய்யுளும் நமக்குப் பாடத்தெரியும், சாமீ! ஏதோ வாயிஞல் சும்மா உளறிக்கொண்டிருப்பான், பாட்டுப் பாடத் தெரியாதவன் என்று நினைத்துவிட