பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 சிறு வயதிலேயே தன் தாயை இழந்து விட்டான் சங்கரன், பாரதியின் தாயும் சிறு வயதிலேயே இறந்து விட்டாள் என்பதாலோ, சிறு வயதிலே தன்னேடு ஒத்த வயதினர்களோடு சேராமல் புலவர்களுடன் மட்டும் நட்புப் பாராட்டினுன் சங்கரன் என்ற காரணங்களைக் கொண்டோ, சங்கரன் கதை பாரதியின் கதை என்று கொள்வது சரியாகுமா? பிஞ்சிலேயே இன்ப ரஸத்தைத் தவிர வேருென்றிலும் நாட்டம் கொள்ளாது, அந்த ஒர் ரசத்தைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாது அதற்காகத் துணிச்சலாக அசிங்கமான பதங்களைக் கொட்டி, பிஞ்சிலே பழுத்து கவிதை' என்ற பெயரில் தாறு மாருக ஏதோ எழுதிய சங்கரனை பாரதிக்கு ஒப்பிடலாமா? சின்னச் சங்கரன் எங்கே? பாரதி எங்கே? பதின்மூன்று வயதிற்குள் தம் கவிதைத் திறத்தால் பாரதி' என்ற சிறப்புப் பட்டத்தை, விருதை சிவஞான யோகியாரிட மிருந்து பெற்றவர் பாரதி. சிவஞான யோகியார் என்ன சாமான்ய மாணவரா? காந்திமதி நாதனைத் தம் கவிதை யால் அடக்கியதும் அந்த சிறுவயதிலேதான். அண்ணுமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துக்கு ஒப்பான காவடிச் சிந்து ஒன்றை முருகன்மேல் பாரதி பாடியதும் அப்போதுதானே! அந்த வயதில் அவர் பாடிய கவிதைகள் எத்தனை எத்தனை! ஒரே ரஸத்திலா பாடினர்? இல்லை, இல்லை! அவரைப் புகழ்ந்த புலவர்களும் எத்தனை பெரியோர்! இந்த பாரதி யும், யமகம்' பாடிய சங்கரனும் ஒரேயளவு திறமை யுள்ளவரா? இனி சின்னச் சங்கர னின் கதையைப் பார்ப்போம். கதாசிரியர் பாரதி தாம் ஐரோப்பிய பாணியையும், நம் நாட்டு பணியையும் சேர்த்துக் கையாளப் போவதாக அக் கதையின் தொடக்கத்திலேயே கூறுகிருt. அதுவரை