பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 பொருளே அடி மட்டம்" என்பது. இந்த கதாபாத்திரம் உண்மையில் மட்டம்தான். காரணம் பாட்டம்" புத்தி சாலியல்ல. முட்டாள், மகா முட்டாள்! ஒரு இளவரசனின் திருமணத்தை யொட்டி நாடகம் போடுகிருர்கள் சிலர். பாட்டம் அதில் மூன்று மாறுபட்ட வேடங்களைத் தான் ஒருவனே ஏற்று நடிக்கத் துடிக்கிருன். "வீரன் பிரமஸாக நான்தான் நடிப்பேன்’ என்கிருன். பிரமஸ்ஸின் காதலி தீப்ஸ் என்ற பெண் பாத்திரத்தையும் தானே நடிக்கப்போவதாகக் கூறுகிருன். அந்த நாடகத் தில் ஒரு சிங்கமும் உள்ளது. அது பயங்கரமாக கர்ஜிக்கும் பிரமலைப் பார்த்து. சிங்கமாகவும் நான்தான் நடிப்பேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிருன். அது எப்படி முடியும்?" என்று மற்றவர் கேட்கின்றனர். அதற்கு பதிலளிக்கிருன் பாட்டம். 'பெண் பாத்திரத்தை நடிக்கும் போது இடிமுழக்கம் போன்ற மெல்லிய கீச்சுக் குரலில் பேசுவேன். சிங்கமாக வரும் போது குயிலிசை போல கர்ஜிப்பேன்!" என்கிருன். ஐயோ பாவம்! இடி முழக்கம் என்ற சொல்லுக்கும் மெல்லிய கீச்சுக் குரலுக்கும் வேற்றுமை தெரியாத இவன் எவ்வளவு புத்திசாலி! அது போகட்டும். சிங்கத்தின் கர்ஜனை குயிலைப் போலவா இருக்கும்? அட மண்டுகமே! 聯 峰 事 இவனைப் போன்றே மற்ருெரு பாத்திரமும் உண்டு வேருெரு நாடகத்தில். பன்னிரண்டாம் இரவு' என்ற நாடகத்தில் தோன்றும் சரி ஆண்ட்ரூ ஆக்சிக் பாட்ட மிற்குச் சற்றும் குறைந்தவரல்ல. இவர் இலீரியா நாட்டு அழகி ஒலீவியாவை மணக்கத் துடிக்கிருர். இதற்காக