பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 இவனுடைய இந்த இலக்கியத் திறனைப் பார்க்கும் போது, ராமசாமி கவுண்டரின், "நான் ஒரு கீர்த்தனை பார்த்திருக்கிறேன்" என்ற சொற்கள் காதில் ஒலிக்கின் றனஅல்லவா? அவர், தாம் கட்டிய கீர்த்தனையை பாடிய விதத்தை ஆக்சீக்கின் இசை வல்லமையுடன் ஒப்பிடலாமா? இல்லை, அந்த கீர்த்தனையின் கடைசி அடியைத் திருப்பித் திருப்பி பாடினரே "மிக்க வுண்ட ராஜ போஜனுக் கருள் செய்யும் பாத (மா) இதை நினைத்து சிரிக்கலாமா?

  • 奉 率

ஐந்தாம் ஹென்றி இளவரசனுக இருந்தபோது, அவனுக்குச் சில நண்பர்கள் உண்டு. பால்ஸ்டாப் அவர் களில் ஒருவன். அவனுக்கு இரண்டே வேலைகள் உண்டு. ஒன்று நினைத்தபோதெல்லாம் உண்பது; மற்ருென்று கிடைத்த போதெல்லாம் குடிப்பது. அவனுக்கு மிகப் பெரிய தொந்தி உண்டு. பானை போலிருக்குமாம் வயிறு. உடம்பில் வயிறு தவிர வேறெதுவும் தெரியாது. இந்த பெரிய சாப்பாட்டுராமன் பெரும்புளுகன்; படுசோம்பேறி: மகா கோழை. 蛇 羅 事 பால்ஸ்டாப் போல ஜமீந்தாரும் பெ ரு ந் தீ விப் பண்டாரம். பால்ஸ்டாப் குடிப்பான். இவர் லேகியம் சாப்பிடுவார். இது ஒரே ஒரு வித்தியாசம். மற்றபடி உருவம் எதிலும் எந்தவித வேற்றுமையும் கிடையாது. ஆனல் பால்ஸ்டாப் மிகவும் புத்திசாலி, கெட்டிக்காரன். அலெக்சாண்டர் போப் என்பவர். ஒரு பெரிய ஆங்கிலக் கவி, அவருடைய ஆன் எபிஸில் டு அர்பத் நாட்